நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய தேங்காய் வகை - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 30 November 2023

நாட்டில் முதன்முறையாக அடையாளம் காணப்பட்ட புதிய தேங்காய் வகை

 



மிரிஸ்ஸ பிரதேசத்தில் இனிப்பு சுவையுடன் கூடிய புதிய தேங்காய் வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தென்னை ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.



இலங்கையில், இவ்வாறான தேங்காய் வகை அடையாளம் காணப்படுவது இதுவே முதல் தடவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



இந்த தென்னை மரத்தில் விளையும் காய்களில் பெரும்பாலானவை சாதாரண தேங்காய்கள் என்றும், சுமார் இரண்டு சதவீத தேங்காய்களின் கூழ் மட்டுமே இனிப்பான சுவை கொண்டது என்றும் தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்துள்ளது.



மேலும், இந்த தேங்காய் சாதாரண தேங்காய் போன்று தோற்றமளித்தாலும், இதன் சதை சாதாரண தேங்காயின் சதையை விட சற்று மென்மையாகவும், நார் தன்மை சற்று குறைவாகவும் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.



இந்த இனிப்பு தேங்காய் புதிய தேங்காய் வகையா அல்லது மரபணு மாற்றமா என்பதை இன்னும் கண்டறிய முடியாததால், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் இது குறித்த ஆய்வை தொடங்கியுள்ளது.



இவ்வாறான இனிப்பான தேங்காய்கள் அதிகமாக இருந்தால் உடனடியாக தெரிவிக்குமாறு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here