வவுனியா, ஓமந்தையில் பாரவூர்த்தியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இன்று 19 ஆம் திகதி காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழில் இருந்து வவுனியா திசை நோக்கி பயணித்த பாரவூர்த்தி ஓமந்தைப் பகுதியில் பயணித்த போது வீதியில் படுத்திருந்த மாடுகளுடன் மோதி விபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், பாரவூர்தியை செலுத்திய போது அதே வழியில் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து பாரவூத்தி வீதியை விட்டு விலகி தடம்புரண்டது.
விபத்தில் பாரவூர்த்தியில் பயணித்த சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்ததுடன், பேருந்தில் பயணித்த பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஒமந்தை பொலிசாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment