யாழில் மலையகத்தை உணர்வோம் என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்று இன்று ஆரம்பம்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 30 November 2023

யாழில் மலையகத்தை உணர்வோம் என்ற தொனிப்பொருளில் நிகழ்வொன்று இன்று ஆரம்பம்!

 



யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் இன்று (30) காலை 9:30 மணிக்கு ஆரம்பமாகியுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் மூன்றாம் திகதி வரை இடம்பெறவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.



இதேவேளை"யாழில் மலையகத்தை உணர்வோம்" என்ற நிகழ்வு இடம்பெறும் மண்டபத்தில் மலையக மக்களின் கடந்த கால மற்றும் தற்போதைய வாழ்வியலை உணர்த்தும் கண்காட்சியும் இடம்பெற்று வருகின்றது.



யாழ்ப்பாணம் சிவில் அமைப்புகள், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து நடாத்தும் இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பளர் ஜோன் குயின்ரஸ், முன்னாள் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், கண்டி சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி.முத்துலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here