வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதன் காரணமாக நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
இன்றைய நாளுக்கான வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
”வடக்கு, வடமேல், மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
No comments:
Post a Comment