நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக் கொள்ளும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கல்வி அமைச்சு இதற்கான விண்ணப்பங்களை கோரியுள்ளது.
தேர்வுக்கான திறந்த போட்டித் தேர்வு எதிர்வரும் 2024 ஜனவரியில் நடத்தப்பட உள்ளது.
போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவம் www.doenets.lk இணையத்தளத்தில் “Online Applications – Recruitment Exams” என்பதன் கீழ்,வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதி டிசம்பர் முதலாம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆதீரன்
No comments:
Post a Comment