நாடாளுமன்ற அமர்வுகள் ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்திற்குள் ஏற்பட்ட குழப்ப நிலை காரணமாக இவ்வாறு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் சபை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எதிரக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றிக் கொண்டிருக்கும் போது இடையிட்ட அரச தரப்பு உறுப்பினர்கள் கடும் கூச்சலிட்டனர்.
இதன்போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது இடத்தில் இருந்து எழுந்துச் சஜித் பிரேமதாசவின் இடத்திற்குச் சென்று குழப்பம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்.
அதேசமயம், எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களும் குறித்த இடத்தில் ஒன்று திரண்டதுடன் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.
அத்துடன் நாடாளுமன்ற சபை அமர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.
ஆதீரன்
No comments:
Post a Comment