உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 29 November 2023

உலகின் 8வது அதிசயமாக அங்கோர் வாட் கோயில் அறிவிப்பு!

 




உலகின் 8வது அதிசயமாக கம்போடியாவின் அங்கோர் வாட் கோயில் அறிவிக்கப்பட்டுள்ளது.



அங்கோர் வாட் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கியமான தொல்பொருள் தளங்களில் ஒன்றாகும், இது கம்போடியாவின் வடக்கு மாகாணமான சீம் ரீப்பில் அமைந்துள்ளது. 



சுமார் 400 கிமீ சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலமாக அங்கோர் வாட் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.



இந்நிலையில், சமீபத்தில் அங்கோர் வாட் உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது. 



உலகில் அறிமுகமே தேவையில்லாத இடங்களில் இதுவும் ஒன்று. கம்போடியாவில் அமைந்துள்ள அங்கோர் வாட் கோயில் உலகில் அதிகமான பயணிகளை  ஈர்க்கும் சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக உள்ளது.



கம்போடியாவின் மையப்பகுதியில் உள்ள அங்கோர் வாட், இத்தாலியின் பாம்பீயைப் பின்னுக்குத் தள்ளி உலகின் எட்டாவது அதிசயமாக மாறியுள்ளது. 



ஒவ்வொரு ஆண்டும் பாம்பீக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளைவிட அங்கோர் வாட்டுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள்தான் அதிகம்.



உலகின் எட்டாவது அதிசயம் என்பது புதிய கட்டிடங்கள் அல்லது திட்டங்கள் அல்லது வடிவமைப்புகளுக்கு வழங்கப்படும் அதிகாரபூர்வமற்ற அங்கீகாரம் ஆகும். இத்தாலியின் பாம்பீயிடம் இருந்து அந்த இடத்தை அங்கோர் வாட் தட்டப் பறித்துள்ளது.



அங்கோர் வாட் கோவில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இது ஆண்டுதோறும் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. 



இது முதலில் இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கோவிலாகக் கட்டப்பட்டது. பின்னர் புத்த மதத்தின் முக்கிய கோவிலாக மாறியது.



அங்கோர் என்றால் எட்டுக் கைகளையுடைய விஷ்ணுவைக் குறிக்கும். 12 ஆம் நூற்றாண்டில் இரண்டாம் சூர்யவர்மன் என்ற மன்னரால் கட்டப்பட்டது. இந்து மதத்திலிருந்து பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை கோவில் சுவர்களிலும் சிற்பங்களிலும் காணமுடிகிறது.


ஆதீரன்

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here