இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் இந்திய அணி சார்பில் அதிகபடியாக விராட் கோலி 117 ஓட்டங்களை பெற்றதுடன், ஷ்ரேயாஸ் ஐயர் 105 ஓட்டங்களையும் சுப்மன் கில் 80 ஓட்டங்களையும் பெற்றனர்.
நியூசிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் Tim Southee 3 விக்கெட்டுக்களையும், Trent Boult 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினார்.
இதற்கமைய, 398 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 327 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.
அந்த அணி சார்பில் Daryl Mitchell அதிகபட்சமாக 134 ஓட்டங்களை பெற்றதுடன் அணியின் தலைவர் Kane Williamson 69 ஓட்டங்களை பெற்றார்.
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் Mohammed Shami 7 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதன்படி இந்திய அணி இந்த ஆண்டுக்கான உலக கிண்ண தொடரில் முதலாவது அணியாக இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
அதேநேரம் இன்றைய தினம் தென்னாபிரிக்க மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment