வெளிநாடு ஒன்றில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சட்டவிரோத போதைப்பொருள் ஒரு தொகுதி சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து விமானப் பொதிகள் மற்றும் தபால்கள் மூலம் கொழும்பு ட்ரைகோ சரக்குகளை அகற்றும் முகவர் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், சுங்க கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் இன்று அவை கைப்பற்றப்பட்டுள்ளன. கொக்கெய்ன் மற்றும் மரிஜுவானா ஆகியவை நுட்பமான முறையில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது
குறித்த போதைப்பொருளின் சந்தை மதிப்பு 6 கோடியே 69 லட்சத்து 40ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பொதி கம்பஹா பகுதியில் உள்ள பெண் ஒருவரின் குடியிருப்பு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதென சுங்க ஊடகப் பேச்சாளர் சுங்கப் பணிப்பாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ட்ரைகோ நிறுவனத்தில் சந்தேகத்திற்கிடமான பார்சல் இன்று திறக்கப்பட்டதுடன், உணவு கேனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 05 கிலோ 161 கிராம் மரிஜுவானா மற்றும் 511 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆதீரன்
No comments:
Post a Comment