இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களால் 5,000 குற்றச்செயல்கள் பதிவு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 20 November 2023

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களால் 5,000 குற்றச்செயல்கள் பதிவு!

 


 (செய்தியாளர் ஆதீரன்)

இலங்கையில் வருடாந்தம் சிறுவர்கள் சம்பந்தப்பட்ட சுமார் 5,000 குற்றச்செயல்கள் பதிவாகுவதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் பாவனை மற்றும் செல்போன் பாவனையே இவ்வாறான பல குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

''இலங்கையில் வருடாந்தம் சிறுவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் சுமார் 5,000 பதிவாவதாக இந்த புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. எமது நாட்டில் பாரிய பிரச்சினையாக மாறியுள்ள போதைப்பொருள் பிரச்சினையே.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றுமொரு மிகப்பெரிய காரணி. இலங்கையில் மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் பதிவாகும் சிறுவர்கள் தொடர்பான குற்றங்கள் பற்றி எங்களுக்குத் தெரியும்.

கையடக்கத் தொலைபேசிகள் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு இட்டுச் செல்லும் ஆபத்தான ஆயுதமாக மாறியுள்ளது. இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகத்தை குறைக்க நாம் முயற்சி எடுத்தால், பெற்றோர்கள் கண்டிப்பாக வீட்டில் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த வேண்டும்." என அவர் குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here