விவசாயிகளுக்கு முதற்கட்ட இழப்பீடாக 389 மில்லியன் ரூபாவை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.
சிறுபோகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்காக இவ்வாறு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் அமைச்சர் மகிந்த அமரவீரவின் தலைமையில் 250 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு : ஏற்பட்டுள்ள நன்மை
பயிர்களுக்கு சேதம்
கடந்த சிறுபோகத்தில் நெற்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த 65,000 ஏக்கர்கள் பயிர்நிலம் வறட்சியால் சேதமடைந்துள்ளன
அத்துடன் 11,000 ஏக்கர்கள் விளைநிலங்கள் தொடர்ச்சியான மழையினால் சேதமடைந்துள்ளன.
இதன் காரணமாக இந்த வருட இறுதிக்குள் பயிர் சேதத்துக்கு நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கமநல காப்புறுதி சபைக்கு விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment