அஸ்வெசும நலன்புரி நன்மை 3 மடங்காக அதிகரிப்பு : ஜனாதிபதி*
Post Top Ad
Wednesday, 15 November 2023
அஸ்வெசும நலன்புரி நன்மை 3 மடங்காக அதிகரிப்பு!
அஸ்வெசும நலன்புரி நன்மை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
புதிய சமூகமொன்றை கட்டியெழுப்பும் நோக்கிலேயே அஸ்வெசும நலன்புரித் திட்ட கொடுப்பனவுகள் மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதென வித்யார்த்த கல்லூரியின் கொழும்பு பல்கலைக்கழக பட்டப்பின் படிப்பு பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 2024 வரவு செலவு திட்டம் தொடர்பான அறிவியல் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை ஒரே வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்க்கவோ அல்லது புறக்கணிக்கவோ முடியாது எனவும் அந்த நிலையை எதிர்கொள்ள அரசாங்கம் நாட்டை தயார்படுத்த வேண்டும் எனவும் தற்பொழுது அந்த பணியையே அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனவும் இந்தக் கலந்துரையாடலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிட்டார்.
Tags
# News
# Srilanka
About Athiraa
தமிழ்த் தேசியம் நீங்கள் எதிர்பார்க்கும் கற்பனையிலிருந்து வெகுதொலைவில் இருக்கிறது. இரத்த சரித்திரங்களை மட்டும் கொண்டதல்ல அது. அநீதிக்கெதிரான போராட்டங்களை மட்டும் முன்னெடுப்பதற்கு குத்தகைக்கு விடப்பட்டதுமல்ல. அது ஒரு யாகம். சிறுக செதுக்கும் சிற்பக்கலை.
Srilanka
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment