19 வருடங்களுக்கு பின்னர் யாழ் பல்கலையில் : நினைவு பதாகை! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 27 November 2023

19 வருடங்களுக்கு பின்னர் யாழ் பல்கலையில் : நினைவு பதாகை!

 


விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக, கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.


இன்று தமிழர் வாழும் தேசங்களில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.


இந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை முன்னிட்டு தற்காலிகமான வளைவொன்று அமைக்கப்பட்டுள்ளது.


மாவீரர் வாரம் கடந்த செவ்வாய்கிழமை (21) ஆரம்பமாகிய நிலையில், ஒவ்வொரு நாளும் பல்கலைக்கழகத்தில் நினைவேந்தல் இடம்பெற்று வருகின்றது.


2004 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன்முறையாக இன்றையதினம் யாழ். பல்கலைக்கழக பிரதான வாயிலில் மாவீரர் நாள் வளைவு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சுற்றுவட்டப் பாதையில் மாவீரர் நாள் பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


“எம் மாவீரர்களின் தியாக வரலாறு வீண்போக கூடாது.... ஆகவே விழித்தெழு இளம் தலைமுறையே .. போதை வஸ்துக்களில் இருந்தும், வன்முறை சமூகத்தில் இருந்தும் விழித்தெழுந்து, அறிவாயுதத்தை பயன்படுத்து” என பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


யாழ்.இந்துக்கல்லூரிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில்" மாவீரர் நாள் என பதாகை கட்டப்பட்டு சிவப்பு மஞ்சள் கொடியுடன் மேலும் சில பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here