கலேவெல நகர மையத்தில் இடம்பெற்ற விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
19 வயதுடைய யுவதியொருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடவிருந்த நிலையில் இன்று (24.11.2023) உயிரிழந்துள்ளார்.
தாய், தந்தை மற்றும் சகோதரியும் பயணித்த முச்சக்கரவண்டி, தார் ஏற்றிச் சென்ற பவுசருடன் மோதி விபத்துக்குள்ளானது.
அவர்கள் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment