கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளைய தினம் 24 ஆம் திகதி நீர் விநியோகம் 16 மணித்தியாலங்களுக்கு தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கே நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நீர் விநியோகம் நாளை 24 ஆம் திகதி மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் 25 ஆம் திகதி காலை 9 மணி வரை 16 மணி நேரம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் கூறியுள்ளது.
ஆதீரன்
No comments:
Post a Comment