இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதலில் சட்டப்பூர்வ கடவுச்சீட்டு மூலம் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டு பின்னர் போலி கடவுச்சீட்டு மூலம் மலேசியாவிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை இலங்கையில் இருந்து சுமார் 13 சிறுவர்கள் மலேசியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் கடத்தல்காரர் ஒருவருக்கு இதில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
(செய்தியாளர் ஆதிரா)
No comments:
Post a Comment