வரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம்(2024.04) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான கொடுப்பனவு அக்டோபரிலிருந்து 6 மாத காலத்துக்குள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது “இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள், வறுமையான மற்றும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள், சிறிய மற்றும் மத்திய தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாக” நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment