செவ்வாய் அக் 3 மாலை 5.57 மணிக்கு கன்னியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆனார். இங்கு கேது பகவானுடன் சேர்ந்து அடுத்த 45 நாட்களுக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார். செவ்வாய் கேது சேர்க்கை 12 ராசிக்காரர்களுக்கு அடுத்த 45 நாட்களுக்கு பம்பர் பலன்களைத் தரும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். ராசிக்கு 7ம் வீடான துலாம் ராசியில் செவ்வாயின் சஞ்சாரம் தொழில் ரீதியாக உங்களுக்கு மிகவும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
இந்த காலகட்டத்தில், உங்கள் தொழிலில் மிகவும் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
ஆனால் குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும். செவ்வாய் சஞ்சாரம் களத்திரத்தில் இருப்பதால் உங்கள் மனைவியுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவை வலுவாக வைத்திருக்க, உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது அவசியம்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் சஞ்சாரம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில், ரிஷபம் ராசிக்காரர்கள் தங்கள் வேலையை மாற்ற முயற்சிக்கலாம். உங்கள் எதிரிகள் மீதும் ஆதிக்கம் செலுத்துவீர்கள். உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். உறவில் விரிசல் ஏற்படலாம் எச்சரிக்கை தேவை.
மிதுனம்
துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல பலன் கிடைக்கும். இக்காலகட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், உங்கள் மன உறுதி அதிகமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சாரம் மிகவும் அற்புதமாக அமையப் போகிறது. இந்த காலகட்டத்தில் நிலம் அல்லது வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் பணியிடத்திலும் நல்ல மாற்றங்களைக் காணலாம். நீங்கள் உங்கள் தாயின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
சிம்மம்
துலாம் ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும் விதமாக இருக்கும். உங்கள் தைரியமும் அதிகரிக்கும். இந்தக் காலத்தில் சாகச வேலைகளைச் செய்யலாம். இதனுடன், நீங்கள் உங்கள் இளைய சகோதர சகோதரிகளுடன் எங்காவது சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.
கன்னி
கன்னி ராசியினருக்கு செவ்வாய் துலாம் ராசியில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் உங்கள் பேச்சில் கவனம் தேவை. இந்த காலகட்டத்தில் உங்கள் பேச்சு சற்று கடுமையாக இருக்கும். பேச்சால் உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இடையே சிக்கல் ஏற்படும். மற்றவர்களுடனான உரையாடலின் போது மிகவும் சிந்தனையுடன் வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மிக சிறப்பானதாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் நிறைய ஆற்றலுடன் செயல்படுவீர்கள். உங்கள் மனமும் மிகவும் அலைபாயக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில், நீங்கள் விளையாட்டுத்தனமாகச் செயல்படுவதைக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நேரத்தில் யோகா, தியானம் செய்தால் பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
இந்த செவ்வாய் சஞ்சாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் 12வது வீட்டில் ராசி நாதன் சஞ்சரிக்கக்கூடிய காலத்தில் உங்களுக்கு வெளிநாட்டு மூலங்களிலிருந்து நிதி நன்மைகளைத் தரக்கூடும். இருப்பினும், இந்த ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் பணத்தை மிகவும் கவனமாகச் செலவழிக்க வேண்டும்.
கும்பம்
செவ்வாயின் இந்த சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சற்று தொல்லை தரக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் குரு, தந்தை, தந்தை போன்றவர்களிடம் நல்ல ஆலோச்னை பெற்றிட முடியும். உங்கள் மனைவியின் குடும்பத்தினருடன் சில மன கசப்பான சூழல் ஏற்படலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த செவ்வாய் சஞ்சாரத்தால் திடீர் பண பலன்களைப் பெறலாம். இருப்பினும் செவ்வாய் எட்டாம் வீட்டில் அமர்வதால் வயிறு சம்பந்தமான உடல்நலப் பிரச்சனைகள் வரலாம். எனவே இந்த ராசிக்காரர்கள் உடற்பயிற்சி அல்லது யோகா செய்து உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment