ஹொரண, மில்லனிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஏ.ஜி.என் விஜேதுங்க இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் எல்பிட்டிய பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதேவேளை, பெலியத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஈ.எம்.ஐ.பீ விஜேரத்ன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் பெலியத்த பொலிஸ் நிலையத்தில் இருந்து கண்டி பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பரவிய சர்ச்சைக்குரிய ஒலிநாடா காரணமாக பெலியத்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment