திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவரான ‘மன்ன கண்ணா’ என அறியப்படும் மாரிமுத்து கணேசன் ராஜா என்பவர் மீது, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் கொழும்பு 13 மற்றும் 14 பகுதிகளைச் சேர்ந்த, 20 முதல் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – கிராண்ட்பாஸ், நவகம்புர பகுதியில் வைத்து கடந்த 19 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மன்ன கண்ணா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவமானது, குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவினால் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment