வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில், இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இராணுவ முகாம் அருகே உள்ள காணியை துப்பிரவு செய்யும் நடவடிக்கையில், இன்று மக்கள் ஈடுபட்டனர்.
இன்று காலை 10.30 மணியளவில், மக்களால் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள், எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெற உள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில், சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.
No comments:
Post a Comment