ராஜபக்ஷர்களின் சில்லறைத்தனமான செயற்பாடுகளையே ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுக்கின்றார் – சமீர பெரேரா - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 12 November 2022

ராஜபக்ஷர்களின் சில்லறைத்தனமான செயற்பாடுகளையே ரணில் விக்கிரமசிங்கவும் முன்னெடுக்கின்றார் – சமீர பெரேரா


ராஜபக்ஷர்கள் இதுவரை செய்த சில்லறைத்தனமான செயற்பாடுகளையே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செய்து வருகின்றார் என்று ‘முதலில் அரசியல் அமைப்பு’ இன் ஒருங்கமைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


ராஜபக்ஷர்களை போன்றே ரணில் விக்கிரமசிங்கவும் செயற்படுகின்றார்.


ராஜபக்ஷர்களின் அரசியலை பின் தொடர்வது போன்றே தற்போதைய ஜனாதிபதியின் போக்கும் அமைந்துள்ளது.


போராட்டக்காரர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தரப்பினரும் இருக்கின்றனர்.


இவ்வாறான தரப்பினர், அதேபோன்று பிரதேச சபை உறுப்பினர்கள் என்பவர்களை திரட்டி சீனா தூதுவராலயத்துக்கு முன்பாக சீனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்குகின்றனர்.


எதற்காக ராஜபக்ஷர்களுக்கு இனி இல்லை என்றளவில் கடன் வழங்கி நாட்டை கடன்கார நாடாக மாற்றியுள்ளீர்கள் என்று இந்தத் தரப்பினர் கேள்வி எழுப்பும் வகையில் நாடகங்களை அரங்கேற்றியுள்ளனர்.


கடனை மறுசீரமைக்க வேண்டியது அவசியம். ஏன் அதனை செய்யாமல் இருக்கின்றீர்கள் என்று கேள்வி எழுப்பிகின்றனர்.


மக்களை ஏமாற்றுவதற்காக இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றுகின்றனர்.


இவ்வாறான செயற்பாடுகள் வெறும் கண்துடைப்பான செயற்பாடுகளாகும்.


இவ்வாறான போராட்டாங்களால் சீன அரசாங்கம் ஒன்றும் பயந்துவிடப்போவதில்லை.


ரணில் விக்கிரமசிங்க என்பவர் மிகச் சிறந்த இராஜதந்திரி என்று அநேகமானோர் நினைத்துக்கொண்டுள்ளனர்.


ஆனால் அவர் அவ்வாறு இல்லை. அவர் மிகச் சிறந்த இராஜதந்திரி என்பதற்கு பதிலாக ராஜபக்ஷர்களின் சில்லறைத்தனமான செயற்பாடுகளை அரங்கேற்றும் நபராகவே அவர் செயற்படுகின்றார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here