புத்தளம் நவகத்தேகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிரிமெட்டியாவ பிரதேசத்தில், மின்னல் தாக்கத்துக்கு உள்ளான மூவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கிரமெட்டியாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த நபரும் அவரது மனைவி மற்றும் அவரது இரு நண்பிகள் இணைந்து வயல் வெளியில் விருந்துபசாரத்தில் ஈடுபட்டு இருந்துள்ளனர் என்றும் இதன்போதே குறித்த மூவரும் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் எரிகாயங்களுக்கு உள்ளான மூவரும் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இரு பெண்களும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments:
Post a Comment