பதுளை, எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அம்தன்டேகம கரந்தகால்ல வீதியிலிருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அம்ந்தண்டேகம, பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 49 வயது பெண்ணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment