மூலப்பொருட்கள் பற்றாக்குறை மற்றும் விலை அதிகரிப்பு காரணமாக பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடிகளுக்கான தட்டுப்பாடு நிலவக்கூடும் அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
200க்கும் அதிகமான பட்டாசு உள்ளிட்ட கேளிக்கை வெடி பொருட்களின் உற்பத்தியாளர்கள் நீர்கொழும்பு பகுதிகளில் உள்ளதுடன், அதனை அண்டிய பகுதிகளிலும் பட்டாசு உற்பத்தியாளர்கள் தமது தொழிலை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தற்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் குறித்த தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் அரச வர்த்தக கூட்டுத்தாபனம் ஊடாக வழங்கப்படும் அதேவேளை, கடந்த இரு மாதங்களாக அவை கிடைக்கப்பெறவில்லை என அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment