மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அறிவிப்பு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 23 November 2022

மத்திய வங்கியின் ஆளுநர் விசேட அறிவிப்பு!

 நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், பொது நிதி தொடர்பான இறுதி அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ள போதிலும், நாட்டின் நிதிக் கொள்கை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய வங்கிக்கே உள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.


கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுநர், வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது வெளியிடப்பட்ட சில அறிக்கைகளை பார்க்கும் போது அவை மத்திய வங்கியின் வகிபாகம் பற்றிய புரிதல் இன்மையால் கூறப்பட்டதாகவே தோன்றுகின்றது என தெரிவித்தார்.


அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


“இத்தினங்களில் வரவு செலவு திட்ட விவாதத்தைக் கேட்கும் போது மத்திய வங்கி மீது குற்றம் சாட்டப்படுகிறது. மத்திய வங்கி பொருளாதாரத்தை சுருக்கியதால் மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. 


இலங்கை மக்களும் வர்த்தகர்களும் தங்களுக்கு ஏதாவது நிவாரணம் தேவைப்பட்டால் உடனடியாக மத்திய வங்கியுடன் பேச வேண்டும் என்று நினைக்கின்றனர். 


அதற்குக் காரணம் உண்டு. மத்திய வங்கியின் சில முன்னாள் ஆளுநர்கள் நிதிக் கொள்கை பற்றி அல்லாமல் ஏனைய எல்லாவற்றையும் பற்றி பேசினார்கள். நிதிக் கொள்கை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 


நிதிக் கொள்கையின் அடிப்படையில் வேறொருவருக்குச் செய்யக்கூடிய அதிகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை. ஒரு சுதந்திரமான மத்திய வங்கியாக நிதி முடிவுகளை எடுப்பவர்கள் நிதிக் கொள்கையை கட்டுப்படுத்துவது எனக்குப் பிடிக்கவில்லை.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here