நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக இந்த அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சமூகத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் பிள்ளைகளின் போசாக்கு நிலையை பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் பிரகாரம் எதிர்காலத்தில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் எனவும் ஆனால் அதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் தேவை எனவும் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
சரியான தொலைநோக்குப் பார்வையின் ஊடாக நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் செல்வதற்கு உறுதியான கொள்கைக் கட்டமைப்பைத் தயாரிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், அதற்குத் தேவையான நடவடிக்கையை ஜனதிபதி எடுப்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment