யாழ்ப்பாணம் தெல்லிப்பளை குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையில் இரு வேறு பகுதிகளில் போதை மாத்திரைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 மற்றும் 22 வயது உடைய இளைஞர்கள் 8 மற்றும் 10 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மல்லாகம் புகையிரத நிலைய வீதியில் வைத்து 36 வயது உடைய பெண் ஒருவர் 40 போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment