சாதனைபடைத்த மாணவர்கள் மற்றும் சமூக செயற்பாட்டு ஊக்குவிப்பாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது
பாடசாலை மட்டம் ,வலய மட்டம் ,மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகள் , தமிழ்த்தின போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்ற மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் , உயர்தர பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் , விவசாய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் மற்றும் சமூக செயற்பாட்டு ஊக்குவிப்பாளர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் நடைபெற்றது
பாடசாலை ,ஆசிரியர்கள்,மாணவர்கள் , பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் பாடசாலை சமூகம் என பலரின் ஒத்துழைப்புடன் சிவன் அருள் அறக்கட்டளை அனுசரணையில் நடைபெற்ற சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சாதனைபடைத்த மாணவர்களுக்கு பதக்கங்களும் ,சான்றிதழ்களும் ,பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை சமூக பணிகளை முன்னெடுத்து வரும் சமூக செயற்பாட்டாளர்களும் ,மயிலம்பாவெளி பிரதேசத்தில் சிறந்த அன்னை என பலராலும் பாராட்டப்படுகின்ற தாய் ஒருவரும் பொன்னாடைபோர்த்தி கௌரவிக்கப்பட்டார்
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் ,சிறப்பு அதிதிகளாக ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் டி .ராஜமோகன் கோறளைப்பற்று உதவி திட்டமிடல் பணிப்பாளர் இ.கங்காதரன் , ,கௌரவ அதிதியாக கே .துரைராஜா ,விசேட விருந்தினர்களாக
செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வி புவிதாசன் , மற்றும் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் , கல்லூரி அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கல்லூரி பழைய மாணவர்கள், பாடசாலை சமூகம் என பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் குறித்த நிகழ்வில் டான் தொலைக்காட்சி ஊடகவியலாளரை பாடசாலை அதிபர் ,பாடசாலை பழைய மாணவர்கள் , பாடசாலை சமூகத்தினரினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment