மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் எட்டு மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் த.தயானந்தன் தெரிவித்தார்.
இன்று மண்முனைப்பற்று பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் சபையில் தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்டு சபை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மட்டுமே இந்த வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும் ஏனைய உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment