மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுர்த்தி வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நேற்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில். இவ்வாண்டின் கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் அக்டோபர் மாதம் வரைக்கும் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு தொர்பாக ஆராயப்பட்டதுடன் ஒவ்வொரு பகுதி பகுதியாக முன்னேற்றங்கள் தொடர்பான அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு. உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்.
எஸ்.புவனேந்திரன் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் திருமதி எம்.எஸ் சில்மியா மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி தலைமையக கணக்காளர் பசீர், மாவட்ட தலைமையக முகாமையாளர் மனோகிதராஜ் , முகாமையாளர்களான அலி அக்பர் , திருமதி நிர்மலா காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ் உட்பட சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் திட்ட முகாமையாளர் மாவட்ட சமுர்த்தி உள்ளக கணக்காய்வு அதிகாரிகள் வலய முகாமையாளர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் சமுர்த்தி நிவாரண உதவிகள் நலன்புரி உதவிகள் சமுர்த்தி கடன் வேலைத் திட்டம் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டன.
No comments:
Post a Comment