அமெரிக்காவில் நடுவானில் மோதிய இரு விமானங்கள்! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Sunday, 13 November 2022

அமெரிக்காவில் நடுவானில் மோதிய இரு விமானங்கள்!

 அமெரிக்காவின் டெக்ஸாஸில் நேற்று இடம்பெற்ற விமான கண்காட்சியின் போது இரண்டு விமானங்கள் ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 


போயிங் ரக பி-17 என்ற விமானம் ஒன்றும் சிறிய ரக விமானம் ஒன்றுமே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானங்களையும் செலுத்தியவர்களின் நிலை இதுவரையில் கண்டறியப்படவில்லை. 


அதிகாரிகள் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தவில்லை. எனினும், அறிக்கைகளின்படி குறைந்தது 6 பேர் விமானத்தில் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 


அத்துடன் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று இதன் போது சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்து இடம்பெற்ற பகுதியில் மீட்பு பணிகள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here