கல்முனை இஸ்லாமபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் வகுப்பறைக் கவின் நிலைப் போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வு நேற்று பாடசாலை கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் ஏ. ஜீ.எம். றிசாத் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பிரதிக் கல்விப்பணிப்பாளர் திரு.ஏ.எச்.பௌஸ் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்
இதன்போது போட்டி நிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் பிரதம அதிதியால் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாடசாலை ஆசிரியர்களும், பெற்றோர்களும், மற்றும் மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment