வரலாற்று சிறப்பு பெற்றதும் தொன்மையான பாரம்பரிய நிகழ்விடத்தில் அமைந்துள்ள சித்தாண்டி பெருமாவெளி ஸ்ரீ பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழாவில் எண்ணைய்காப்பு வைத்தல் நடைபெற்றது.
வயற்க்கரைகள் ஆறுகள் மற்றும் இயற்கையினால் சூழப்பட்ட பெருமாவெளி ஸ்ரீ பிள்ளையார் ஆலயத்தில் மகோற்சவ மகா கும்பாபிஷேகத்தின் கர்மாரம்பபூசை வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி சனிக்கிழமை எம்பெருமானுக்கு எண்ணைய்காப்பு வைத்தல் ஆரம்பமாகி நடைபெற்றது.
ஆலயத்தின் கற்பகிரகத்தில் தொன்மையான காலத்துக்கு உட்பட்ட மூன்று கல்லுருவான ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு எண்ணைய்காப்பு சாத்தப்பட்டது.
பிரதான யாகசாலையில் எழுந்தருளப் பெற்ற பிரதான கும்பத்துக்கு பூஜைகள் இடம் பெற்றதும் அடியார்களின் அரோகரா கோஷத்துடன் மூலமூர்த்தி விநாயகர் பெருமானுக்கு எண்ணைய் சாத்தப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா பூசைகள் ஆரம்பமாகி கலசகுடமுழுக்கு மூலமூர்த்தி பெருமானுக்கு மகா கும்பாபிஷேக பெருவிழாவின் பிரதான குருக்களினால் பிரதான கும்ப குடமுழுக்கு என்பன இடம்பெற்று சித்தாண்டி பெருமாவெளி ஸ்ரீP பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக குடமுழுக்கு பெருவிழா நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment