குருணாகல் பொலிபித்திகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், நகை கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர், தங்க நகைகள் மற்றும் ஹெரோய்ன் போதைப் பொருள் என்பவற்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிபித்திகம, மெல்சிறிபுர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 25, 37 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் ஹெரோய்ன் போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்கள் கொள்ளையிட்டதாகக் கருதப்படும் 3 தங்கச் சங்கிலிகள், 06 தங்க மோதிரங்கள், 3 தங்க காதணிகள், 05 தங்க பெண்டன்கள் என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment