குரங்கம்மை வைரஸின் (மங்கிபொக்ஸ்) பெயரை ‘எம்பொக்ஸ்’ என மாற்றுவது தொடர்பில் உலக சுகாதார அமைப்பு அவதானம் செலுத்தியுள்ளது. இது குறித்த தீர்மானம் நாளை எடுக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த காலங்களில், அமெரிக்கா குரங்கம்மையின் (மங்கிபொக்ஸ்) பெயரை மாற்றுவதில் அவதானம் செலுத்தியது. மங்கிபொக்ஸ் என்ற பெயர் ஒரு குறிப்பிட்ட குழு அல்லது மூன்றாம் தரப்பினருக்கு பாரபட்சத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.
1970 ஆம் ஆண்டில், கொங்கோ நாட்டில் 9 மாத குழந்தையொன்றிடம் முதன்முதலில் மங்கிபொக்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, உலகம் முழுவதும் 20,774 பேர் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கடந்த அக்டோபர் 25 முதல் நவம்பர் 8 வரை 47 பேர் உலகளாவிய ரீதியில் குரங்கம்மை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மையில், வெளிநாடுகளிலிருந்து இலங்கை திரும்பிய இருவர் குரங்கம்மை தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
No comments:
Post a Comment