ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் முழுமையான ஆதரவு வழங்குவாரா? - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, 14 November 2022

ஜனாதிபதிக்கு இரா.சம்பந்தன் முழுமையான ஆதரவு வழங்குவாரா?

நாங்கள் பேசப்போகின்றோம் செய்யப்போகின்றோம் என்று சொல்லிக்கொண்டிருக்காமல் பேசி செய்ய வேண்டியவற்றைச் செய்ய வேண்டும். அதுதான் முக்கியம். 


ஜனாதிபதி ரணிலின் செயல்பாடுகள் நம்பிக்கைக்குரியதாக இருந்தால் எங்கள் முழுமையான ஆதரவு கிடைக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எங்களுடன் பேசுவது என்றால் முக்கியமாக புதிய அரசமைப்பு தொடர்பில் தான் அந்தப் பேச்சு அமைய வேண்டும். தமிழ் பேசும் மக்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு புதிய அரசமைப்பு ஊடாக நிறைவேற்றப்பட வேண்டும். 


இந்த விடயம் சம்பந்தமாக எமது நிலைப்பாட்டை விளக்கி நாம் எழுத்து வடிவிலான கோரிக்கைகளை ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளோம். அந்தக் கோரிக்கைகள் மிகவும் விவரமானவை. 


ஆனால், அதன் அடிப்படையில் ஒன்றும் நடைபெறவில்லை. ஆட்சிகள் மட்டும் மாறியிருக்கின்றன. ஒவ்வோர் ஆட்சியிலும் தாங்கள் அதைச் செய்வோம் – இதைச் செய்வோம் என்று அரச தரப்பினர் சொல்லியிருக்கிறார்கள். 


ஆனால், அவர்கள் எதையும் செய்யவில்லை. இதுவிடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிலைப்பாடு வித்தியாசமாக – நம்பிக்கைக்குரியதாக- முன்னேற்றம் காணக்கூடிய வகையில் கையாளப்படுமாக இருந்தால், தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் எங்களால் இயன்ற ஒத்துழைப்பை நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கு வழங்குவோம் என இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here