இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களை விட அதிகரித்து காணப்படுவதாகவும், கடந்த காலப்பகுதியை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளின் தினசரி வருகை பதிவு செய்யப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார் 2000 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தருவதோடு இம்மாதத்தில் இதுவரை 27,213 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ரஷ்ய நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கையானது நாளொன்றுக்கு சுமார் 1800 வரையில் அதிகரித்து காணப்படுவதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment