போதைப் பொருள் வியாபாரிகளிடமிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 23 November 2022

போதைப் பொருள் வியாபாரிகளிடமிருந்து மாணவர்களை பாதுகாக்க விசேட நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


கடந்த காலங்களில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அந்த போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர். 


பாடசாலைகளைச் சுற்றி புலனாய்வுப் பிரிவினர் வழமையாக கடமையில் ஈடுபடுத்தப்பட்டு, போதைப் பொருள் வர்த்தகர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here