மருத்துவர்களின் மருத்துவ மற்றும் குடிமை உரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஹிரான் கரசிங்க தெரிவித்துள்ளார்.
மந்தபோசணை குறித்த உண்மையை கூறியதால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள வைத்தியர் சமல் சஞ்சீவவுக்கு ஆதரவாக இலங்கையிலுள்ள சிவில் அமைப்புகள்இ பல்வேறு தொழிற்சங்கங்கள்இ வைத்திய சேவையுடன் தொடர்புடைய தொழிற்சங்கங்கள்இ அரச தொழிற்சங்கங்கள் என சகல தரப்பினரும் குரல்கொடுத்து வருகின்றனர்.
வைத்தியர் சமல் சஞ்சீவ பணிநீக்கம் செய்யப்பட்ட விடயத்துக்கு சகல தரப்பினரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இவ்விடயத்துக்கு எதிராக சிவில் அமைப்புகளும் தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
வைத்தியர் சமல் சஞ்சீவ பணிநீக்கம் செய்யப்பட்டமையானது கண்டிக்கத்தக்க விடயமாகும்.
வைத்தியர் சமல் சஞ்சீவ குறித்தும் அவரது தொழிற்சங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் ஒரு சிலர் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
சந்தேகங்களை வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கு ஒரு விடயத்தை நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த காலங்களில் வைத்தியத்துறைக்காகவும் வைத்திய சேவைக்காகவும் யார் அதிகம் குரல் கொடுத்தார்கள் என்பதை சற்று சிந்தித்துப்பார்க்க வேண்டியது அவசியமாகும்.
வைத்தியர் சமல் சஞ்சீவ தனது தொழிற்சங்கத்தினூடாக வைத்தியர்களின் நலனுக்காகவும் வைத்திய சேவையின் நலனுக்காகவும் பாரியளவில் குரல்கொடுத்துள்ளார்.
வைத்தியர் என்ற முறையில் சிறுவர்இ பெண்களுக்கான போசணையின் அவசியம் குறித்து அவர குரலெழுப்பியிருந்தார்.
அதுமட்டுல்லாது பெண்கள்இ யுவதிகள் பயன்படுத்துகின்ற அணை ஆடையின் விலை அதிகரிப்பு தொடர்பிலும் அதனால் அந்தத் தரப்பினர் எதிர்கொண்ட சவால்கள் குறித்தும்கூட அவர் கடந்தகாலங்களில் வெளிப்படுத்தியிருந்தார்.
அணை ஆடைகளில் விலை அதிகரிப்பு என்பது நாட்டின் சனத்தொகையில் நூற்றுக்கு 50 சதவீதமானோரை பாதிப்புக்கு உள்ளாக்கிய விடயமாகும்.
எனவே இவ்வாறான விடயங்களுக்காகவும் வைத்தியர் சமல் சஞ்சீவ குரல் எழுப்பியுள்ளார். அதிகாரத்துக்காக நாம் இவற்றை செய்யவில்லை. பொறுப்புவாய்ந்த வைத்தியர்கள் என்ற முறையில் மக்களுக்காகவும் வைத்தியசேவைக்காகவுமே நாம் குரல்கொடுத்து வருகின்றோம்.
No comments:
Post a Comment