மல்லாவி வைத்தியசாலைக்கு இரண்டு சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்க உள்ளதாக செந்தில்குமரன் நிவாரண நிதியம்(கனடா) நிறுவுனர் தெரிவித்தார் .
நீண்ட காலமாக பல உதவி திட்டங்களை “நிவாரணம்” என்னும் அமைப்பினூடாக செயற்படுத்தி வருகின்றோம்.
இருதய சத்திர சிகிச்சை மற்றும் நோயால் வாடுபவர்களுக்கான நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றோம்
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் ஒரு கோரிக்கை விடுக்கப்பட்டது அதாவது மல்லாவி பகுதியில் உள்ள சிறுநீரக நோயாளிகள் யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளில் அல்லது முல்லை தீவு வவுனியா சென்று மாத்திரமே இரத்த சுத்திகரிப்பை மேற்கொள்ள முடியும்
இதனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளேன்ஒரு கோடி 30 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு டயாலிசிஸ் இயந்திரங்களை மல்லாவி வைத்தியசாலைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளேன்
நாளை மறுதினம் இந்த இயந்திரங்களை வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் கையளிக்க உள்ளேன்
இதன்மூலம் மல்லாவியில் உள்ள 500ற்கும் மேற்பட்ட சிறுநீரக நோயாளிகள் பயனடையவுள்ளார்கள்என தெரிவித்தார் .
No comments:
Post a Comment