கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதி வீடொன்றில் திருட்டு! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 23 November 2022

கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதி வீடொன்றில் திருட்டு!

 கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதி வீடொன்றில் நூதனமான முறையில் கொள்ளை


யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் மாலை கொள்ளை இடம்பெற்றுள்ளது.


குறித்த வீட்டிலிருந்த பெறுமதியான தங்கத்தோடு இரண்டு ஒரு பவுன், இருபதாயிரம் ரூபா பணம், முப்பது அங்கர் பால் மா பெட்டி ஆகியன கொள்ளை கும்பலால் கொள்ளையிடப்பட்டுள்ளது.


குறித்த கொள்ளை தொடர்பாக மேலும் தெரியவருவது,


கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு செங்குந்தா இந்துகல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (22) செவ்வாய்கிழமை மாலை வீட்டின் உரிமையாளர் ஜெகதீஸ்சன் ஐங்கரன் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றிருந்த தருணத்தில் இனந்தெரியாத கொள்ளை கும்பல் மர்மமான முறையில் முறையில் வீட்டுவளாகத்திற்குள் நுழைந்து வீட்டின் பிரதான முன்வாசல் கதவை கொத்தி உட்சென்று தமது கைவரிசையைகாட்டிய தோடு, நூதனமான முறையில் பெறுமதியான தங்கத்தோடு இரண்டு (ஒரு பவுன்),பணம் (இருபதாயிரம் ரூபா) , முப்பது அங்கர் பால் மா பெட்டி ஆகியவற்றை கொள்ளை கும்பல் கொள்ளையிட்டு சென்றுள்ளது.


குறித்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் (23) வீட்டின் உரிமையாளரால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை அடுத்து கோப்பாய் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணை களை முன்னேடுத்துவருகின்றனர்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here