அமரர் கானா மாரிமுத்து அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு தினமும் தவசி லேர்னிங் சிட்டியின் ஆசிரியர் தின நிகழ்வும்; தவசி லேர்னிங் சிட்டியின் தலைவர் மா.அட்சயன் தலைமையில் நிகழ்வு மட்டக்களப்பு மாவடி வெம்பு தவசி லேனிங் சிட்டியில் நடைபெற்றது.
நிகழ்வுக்கு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் மங்கள விளக்கேற்ற பட்டு இறை வணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமாகியது.
நிகழ்வுக்கு முதன்மை அதிகார ஓய்வு நிலை அதிபர் சத்தியவரதன் மற்றும் மா.தவராச உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தன.
கௌரவ அதிதியாக சித்தாண்டியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர் நல்லதம்பி நித்தியானந்தன் கலந்து கொண்டதுடன் ஊடகவியலாளரின் சேவை நலன் பாராட்டி ஊடகவியலாளர்கான சிறப்பு கௌரவ விருதும் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் ஆசிரியர்கள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டனர் அவர்களுக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன் தவசி லேர்னிங் சிட்டியின் முதல்வரினால் எழுதப்பட்ட இயற்கை என அர்த்தம் தொடர்பான நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
அத்துடன் குறித்த தவசி லேர்னிங் சிட்டியில் கல்வி பயிலும் மாணவர்களுக்குரிய பாடத்துடன் தொடர்புடைய நூல்களும் வெளியிட்டு வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் மாணவர்களின் கலை நிகழ்வும் நடைபெற்றது.
No comments:
Post a Comment