யாழ்ப்பாணம் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட காக்கைதீவில் அமைக்கப்பட்ட, மீன் சந்தை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தலைமையில் திறப்பு விழா இடம்பெற்றது.
காக்கைதீவு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்தொழிலை ஜீவனோபாயமாக மேற்கொண்டு வரும் நிலையில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக சபையின் ஒன்றரை கோடி ரூபாய் நிதிப் பங்களிப்பில் மீன்விற்பனை நிலையம் மற்றும் அதனுடன் கூடிய நவீன மலசல கூடம் என்பன அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment