இலங்கை சந்தையில் கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.
ஒரு தொன் கம்பியின் விலை ஒரு லட்சம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒரு தொன் கம்பியின் விலை தற்போது 4 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதன்படி, 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி, தற்போது 1635 ரூபாவுக்கும் 2700 ரூபாவுக்கு விற்கப்பட்ட 12 மில்லிமீற்றர் கம்பி, 2395 ரூபாவுக்கும் விற்கப்படுகிறது.
அத்துடன் 16 மில்லிமீற்றர் கம்பியின் விலை 4325 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
இதேவேளை 50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து ஒரு மூடை தற்போது சந்தையில் 2975 ரூபாவுக்கு விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment