இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 30 வருட சிறைத் தண்டனையை அனுபவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தரப்புக்கள் முன்னெடுத்து வருகின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 4 இலங்கையர்கள் உட்பட ஆறு பேர் இந்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அவர்களை கடந்த 11ம் இந்திய உயர்நீதிமன்றம் விடுவித்தது. விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்கள், இன்னமும் நாடு கடத்தப்படாத நிலையில், அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
4 பேரையும் நாடு கடத்துவது, இலங்கை அதிகாரிகளிடம் இருந்து பயண ஆவணங்கள் பெறுவதை பொறுத்தே அமையும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் எம்.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment