மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்ததான முகாம் முன்னெடுப்பு - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Saturday, 12 November 2022

மட்டக்களப்பு மாவட்டத்தில் இரத்ததான முகாம் முன்னெடுப்பு


மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று மட்டக்களப்பு மேயர் மண்டபத்தில் நடைபெற்றது


மட்டக்களப்பு அழகுக்கலை சங்கத்தின் தலைவி வனிதா செல்ல பெருமாள் தலைமையில் நடைபெற்ற இரத்ததான ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டிஹார்ச்சி, மாவட்ட அழகுக்கலை சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் சமூக அபிவிருத்தி பணியில் ஈடுபட்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவுகின்ற இரத்த பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னெடுத்துள்ள செயற்திட்டடத்த்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்ட அழகுக்கலை சங்கத்தின் ஏற்பாட்டில் வைத்தியசாலை இரத்த வாங்கி பிரிவுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்.


இந்த இரத்ததான நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி பிரிவு வைத்தியர் ஜெ. இவானி,இரத்த வங்கி பிரிவு பொறுப்பதிகாரி டி.ஜெயராஜ் , பொதுசுகாதார பரிசோதகர் பி.எம்.எம்.பைசல் , பொதுசுகாதார வெளிக்கள உத்தியோகத்தர் ஆர் .அனுபிரதாப் ,வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள், அழகுக்கலை சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் .

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here