உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் முன்னாள் சம்பியன் ஆர்ஜன்டினாவிற்கு எதிரான நேற்றைய போட்டியை சவுதி அரேபியா வெற்றி கொண்டது.
இந்த வெற்றி கொண்டாட்டத்தை கொண்டாடுவதற்காக சவுதி அரேபிய மன்னரால் இன்று(23) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், அரச மற்றும் தனியார் பிரிவுகளில் பணியாற்றும் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா மற்றும் ஆர்ஜென்டினா இடையிலான நேற்றைய(22) போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டினா தோல்வியடைந்தது.
No comments:
Post a Comment