பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; இருவர் கைது! - Athiraa

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 23 November 2022

பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம்; இருவர் கைது!

 தொம்பே பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் 15 வயதான பாடசாலை மாணவியை ஏமாற்றி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 44 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.


இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு அறை வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாக கூறப்படும் உணவகத்தின் முகாமையாளரும் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேக நபர்கள் இருவரும் பூகொட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 


துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here