நாடளாவிய ரீதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சட்டவிரோத மதுபாவனை மற்றும் போதைப் பொருள் சுற்றிவளைப்பில், ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக மூன்று மதுபான சுற்றிவளைப்புகளில் மட்டும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 192 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளத.
அத்துடன் 1,260 லீற்றர் கோடா, ஐந்து செப்புத் தகடுகள், 08 இரும்பு பீப்பாய்கள், 63,350 ரூபாய் பணம் என்பவற்றையும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, கம்பஹா ராகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பட்டுவத்த பிரதேசத்தில் 07 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள், டிஜிட்டல் தராசு என்பவற்றுடன் 41 வயது நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ராகம பிரதேசத்தை சேர்ந்த 41 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடமிருந்து 51,900 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கல்கிஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் 25 கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment